அவர்களை தனியாக விடமுடியாது; 2 குழந்தைகளுடன் இரவு முழுவதும் தங்கிய விமானப்படை கமாண்டோ வீரர் !!
ஜார்கண்ட் மாநிலத்தின் டிர்குட் மலைப்பகுதியில் ரோப்கார்கள் நகராமல் சிக்கி கொண்டதையடுத்து இந்திய விமானப்படை மீட்பு பணியில் இறங்கியது.
இந்த நிலையில் திங்கட்கிழமை ஒரு ரோப் காரில் இரண்டு குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பதை கண்ட கருட் கமாண்டோ வீரர் அவர்களை தனியாக விட மனமில்லாமல்,
அந்த ரோப் காரில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சென்று குழந்தைகளுடன் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் காலை வரை ஆறுதலாக உடனிருந்து பார்த்து கொண்டார்.
அடுத்த நாள் காலை மீட்பு பணிகள் துவங்கியதும் முதலில் குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அடுத்து அந்த வீரரும் மேலே வந்தார்.
இந்த நிகழ்வு மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மாநில முதல்வர் ஹேமந்த் சிங் சோரேன் இந்திய படைவீரர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
இந்திய விமானப்படையின் கருட் கமாண்டோ வீரர்களை தவிர இந்தோ திபெத் எல்லை காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.