1 min read
ரஷ்ய ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றதல்ல அமெரிக்கா !!
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்ததல்ல என கருதுவதாக கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் விஷயங்களை புரிய வைக்க முயற்சிப்பதாகவும் அவர் பாதுகாப்புக்கான செனட் கமிட்டி முன்பு கூறியுள்ளார்.
இந்தியாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வில்சன் எங்களின் நெருங்கிய கூட்டாளியும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுமான இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.