குடிபோதையில் இருந்த BSF அதிகாரியின் பணிநீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம் !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on குடிபோதையில் இருந்த BSF அதிகாரியின் பணிநீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம் !!

மேகாலாயா மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பணியில் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் மேகாலாயா மாநில உயர்நீதிமன்றத்தில் பணிநீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் இனால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீங்கள் குற்றத்தை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் தான் எல்லை பாதுகாப்பு படை உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகவே அதன் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படையின் விதிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி பணிநீக்கத்தை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.