
உலகின் உயரமான சுரங்கப்பாதையை ஹிமாச்சல பிரதேச மாநிலத்தை லடாக் மாநிலத்துடன் இணைக்கும் விதமாக ஷின்கு லா கணவாய் பகுதியில் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த பணிகளில் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு ஈடுபட உள்ளதாகவும் இந்த சுரங்கப்பாதை சுமார் 16,580 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட உள்ளதாகவும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுதிரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ப்ராஜெக்ட் யோஜக் எனும் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் துவங்கும் எனவும் வருகிற 2025ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறைவு பெற்று சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.