ஆயில் இந்தியா லிமிடெட் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் !!

இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது அசாம் மாநிலத்தின் டுலியாஜான் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள அனைத்து ஐடி வசதிகளும் முடங்கி உள்ளதாகவும் இதுபற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு சிக்கல்கள் உணரபட்டதையடுத்து ஆயில் இந்தியா விமிடெட் (Oil India Limited) அதிகாரிகள் ஐடி அமைப்புகளை பாதுகாப்பு விதிமுறைகளின்படி செயலிழக்க செய்துள்ளனர்.

தற்போது HAZARIKA எனும் சர்வதேச புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து ஐடி அமைப்புகளை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன இதற்கு சுமார் 75 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.