பிடித்த சாக்லேட்டை வாங்க எல்லையை கடந்து இந்தியா வந்த வங்கதேச பதின்பருவ சிறுவன் !!

  • Tamil Defense
  • April 18, 2022
  • Comments Off on பிடித்த சாக்லேட்டை வாங்க எல்லையை கடந்து இந்தியா வந்த வங்கதேச பதின்பருவ சிறுவன் !!

எமான் ஹோசைன் எனும் வங்கதேச நாட்டின் கொமில்லா மாவட்டத்தை சேர்ந்த பதின்பருவ சிறுவன் தனக்கு பிடித்தமான சாக்லேட்டை வாங்க எல்லை தாண்டி வந்துள்ளான்.

ஒரு சிறிய ஆற்றை நீந்தி கடந்து எல்லையோர வேலியில் உள்ள ஒட்டை மூலமாக இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் நுழைந்து சாக்லேட் வாங்க வந்த போது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 13 நாள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர், அவனிடம் விசாரித்த போது இது முதல் முறை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இவன் சாக்லேட் வாங்கும் கடை உரிமையாளரிடம் விசாரித்த போது இவனை தவிர பல வங்கதேச சிறுவர்கள் சிறுமிகள் கூட தன்னிடம் சாக்லேட் வாங்க வருவதாக கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் சாக்லேட் வாங்குவதற்கான பணம் மட்டுமே இருந்துள்ளது வேறு எதுவும் இல்லை அவனது குடும்பத்தினரும் வங்கதேச அதிகாரிகளும் இதுவரை இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிபுராவின் கலாம்சூரா பகுதியில் வசிக்கும் எலியஸ் ஹூசைன் கூறும்போது பொதுவாக எல்லை பாதுகாப்பு படையினர் சிறுவர்களை மனிதாபிமான அடிப்படையில் தண்டிப்பது இல்லை கடத்தல்காரர்களை மட்டுமே தண்டிப்பர் என தெரிவித்தார்.