ரஃபேல் போர் விமானம் முதல்முறையாக கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக பறந்தது அந்த நேரத்தில் அதன் AESA radar, Electronic Surveillance (கண்காணிப்பு) மற்றும் JAMMER தொழில்நுட்பங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருந்தன.
ஆனால் அதனுடைய திறன்களை தான்டி அதன் அதிகவிலை காரணமாக ஃபிரான்ஸால் ஒரு ஆர்டரை கூட பிடிக்க முடியாத நிலை நிலவியது , ஒரு விமானம் சுமார் 100 மில்லியன் யூரோக்கள் என்ற நிலையில் அதன் போட்டி விமானங்கள் அதற்கும் குறைவான விலையில் இருந்தன.
பிரேசில் லிபியா மொராக்கோ சுவிட்சர்லாந்து தென்கொரியா ஒமன் என வரிசையாக ஃபிரான்ஸின் ஏற்றுமதி முயற்சிகள் தோல்வியடைந்தன இதனால் ரஃபேல் சாபமாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் தான் 2015ஆம் ஆண்டு எகிப்து முதன்முதலாக 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது, கடந்த ஆண்டும் எகிப்து 30 ரஃபேல் விமானங்களை ஒப்பந்தம் செய்து கொண்டது.
தொடர்ந்து அதே 2015ஆம் ஆண்டில் கத்தார் 24 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு கூடுதலாக 12 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.
2015ஆம் ஆண்டில் தான் இந்தியாவும் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஃபிரான்ஸூடன் ஒப்பந்தத்தை இறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு கீரீஸ் முதலாவது 18 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலமாக ரஃபேல் விமானங்களை பெறும் முதலாவது ஐரோப்பிய நாடு எனும் பெயரை பெற்றது.
இதை தொடர்ந்து க்ரோஷியா நாட்டிற்கு 12 ரஃபேல் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை ஃபிரான்ஸ் இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஃபிரான்ஸூடன் ஒப்பந்தம் செய்து கொண்டது இந்தோனேசியாவும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இன்று ரஃபேல் போர் விமானம் தனது 4.5ஆம் தலைமுறை திறன்களுடன் பல முன்னனி போர் விமானங்களுக்கு உலக சந்தையில் கடும் போட்டியை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.