ஆஸ்திரேலியாவின் இருண்ட பக்கம் மத்திய கிழக்கில் குண்டு வீசம் ஆஸ்திரேலிய ட்ரோன்கள் !!
1 min read

ஆஸ்திரேலியாவின் இருண்ட பக்கம் மத்திய கிழக்கில் குண்டு வீசம் ஆஸ்திரேலிய ட்ரோன்கள் !!

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றில் ஆஸ்திரேலிய விமானப்படையின் ட்ரோன் விமானிகள் மற்றும் தனியார் ராணுவ நிறுவனத்தினர் இங்கிலாந்து விமானப்படையால் பணிக்கு அமர்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

அதாவது இங்கிலாந்து விமானப்படையில் ட்ரோன்களை இயக்க போதுமான விமானிகள் இல்லாத காரணத்தால் மேற்குறிப்பிட்டவர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய சூழல் உருவானது.

இவர்களை கொண்டு இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான அமெரிக்க நிறுவனமான GENERAL ATOMICS உடைய தயாரிப்பான MQ-9 REAPER தாக்குதல் உளவு மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் இயக்கப்பட்டன.

அனைத்து ட்ரோன்களுமே சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்த பட்டதாக DRONE WARS எனும் ஆய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகமும் இதனை ஒப்பு கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஊடகமான ABC தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.