ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது நாடு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
எங்களது பிரார்த்தனைகள் மட்டுமல்ல எங்கள் துப்பாக்கிகள், குண்டுகள், கவச உடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது BUSHMASTER கவச வாகனங்கள் மற்றும் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை சி-17 விமானங்கள் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் காணொளி மூலமாக பேசி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உதவிகளை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.