விஐபி ஹெலிகாப்டர் ஊழல் இரண்டு ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு !!

  • Tamil Defense
  • April 27, 2022
  • Comments Off on விஐபி ஹெலிகாப்டர் ஊழல் இரண்டு ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு !!

முன்னர் இந்திய விமானப்படையின் VIP போக்குவரத்து பிரிவிற்காக Augusta Westland நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் தற்போது இரண்டு ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மீது மத்திய குற்றபுலனாய்வு அமைப்பு வழக்குபதிவு செய்துள்ளது.

ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பிர் சிங் பனேசர் மற்றும் உதவி தலைமை சோதனை விமானி எஸ் ஏ குன்டே ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆக இருந்த நிலையில்

3600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழலில் இவர்களுக்கும் பங்கிருப்பது கண்டறியப்பட்டு முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர் சஷிகாந்த் ஷர்மா உடன் சேர்த்தே மத்திய குற்றபுலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.