ஆப்கன் எல்லையில் பாக் வீரர்கள் மீது தாக்குதல்
1 min read

ஆப்கன் எல்லையில் பாக் வீரர்கள் மீது தாக்குதல்

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ரோந்து சென்ற பாக் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாக பாக் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று இதே பகுதியில் நடைபெற்ற சண்டையில் ஒரு பாக் வீரர் உயிரிழந்துள்ளார்.அதே போல செவ்வாய் அன்று நடைபெற்ற மோதலிலும் இரு பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடம் மட்டும் இந்த பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 97 பாக் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இதே நேரத்தில் 128 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு இராணுவ செய்தி பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.