1 min read
காஷ்மீரில் எல்லை அருகே ஆயுத குவியல் பயங்கரவாதி கைது !!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இந்திய தரைப்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை சிறப்பு நடவடிக்கை குழு கமாண்டோக்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஹவேலி தாலுகாவில் உள்ள நூர்கோட்டி கிராமத்தில் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டு கையகபடுத்தப்பட்டு உள்ளது.
2 ஏகே-47 துப்பாக்கிகள் அவற்றிற்கான 2 மேகஸின்கள், ஒரு 223போர் துப்பாக்கிஅதற்கான 2 மேகஸின்கள்,
ஒரு சீன கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ஒரு மேகஸின், 63 ஏகே-47 தோட்டாக்கள், இருபது 223போர் தோட்டாக்கள் மற்றும் நான்கு கைத்துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கபட்டன.
மேலும் வடக்கு காஷ்மீரில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு பயங்கரவாதியை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்தனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.