
இந்தியாவின் முப்படைகள் தனித்தனியே தங்களது ட்ரோன் எதிர்ப்பு திறன்களை மேம்படுத்தி வரும் நிலையில் தற்போது DRDO உள்நாட்டிலேயே தயாரித்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பானது நிலையான மற்றும் நகரும் வடிவங்களை கொண்டது இதனால் இலக்குகளை அடையாளம் கண்டு தடுப்பது அல்லது அழிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதற்காக இந்த அமைப்பில் ஒரு RADAR, DAY- NIGHT CAMERA, COMM SYSTEMS, JAMMER, SPOOFING SYSTEM, LASER WEAPON & COMMAND – CONTROL CENTER ஆகியவை ஒருங்கிணைந்த நிலையில் உருவாக்கப்பட்டு உள்ளதாக DRDO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் JAMMING/ SPOOFING மூலமாக ட்ரோனை செயலிழக்க செய்ய முடியும் அதுவே தேவைப்பட்டால் LASER WEAPON கொண்டு ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பில் உள்ள ரேடாரால் Small Hybrid UAV, Micro UAV, Multi Rotor UAV மற்றும் Nano UAV ஆகியவற்றை கூட கண்டுபிடிக்க முடியும் என்பதும் மற்றும் ரேடார்களால் முடியாது என்பதும்
இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பில் உள்ள பாகங்கள் பலவற்றை பல தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக தயாரித்து வருகின்றன ஆனால் எந்த நிறுவனமும் ஒற்றையாக ஒட்டுமொத்த அமைப்பையும் தயாரிக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.