இந்திய கப்பல் கட்டுமான தளங்களை பராமரிப்பு பணிகளுக்கு அமெரிக்க கடற்படை பயன்படுத்தி கொள்ளும் திட்டம் !!

  • Tamil Defense
  • April 18, 2022
  • Comments Off on இந்திய கப்பல் கட்டுமான தளங்களை பராமரிப்பு பணிகளுக்கு அமெரிக்க கடற்படை பயன்படுத்தி கொள்ளும் திட்டம் !!

இந்திய கப்பல் கட்டுமான தளங்களை அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ளும் திட்டத்தை பற்றி இரண்டு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் மேம்படுவதோடு மட்டுமின்றி இந்திய கப்பல் கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகமும் வருவாயும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 2+2 இருதரப்பு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை பேச்சுவார்த்தைகளில் இந்த திட்டம் பற்றிய விவாதம் முக்கிய இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் அனுமதிக்கப்பட்டால் அமெரிக்க கடற்படையின் போக்குவரத்து பிரிவின் கப்பல்கள் இந்திய கப்பல் கட்டுமான தளங்களை பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தி கொள்ளும் நிலை ஏற்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.