இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தின் பங்களிப்பு !!

  • Tamil Defense
  • April 24, 2022
  • Comments Off on இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தின் பங்களிப்பு !!

இந்திய அரசு உள்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் ஊக்குவிக்கும் விதமாக ஆத்மநிர்பார் பாரத் ATMANIRBHAR BHARAT எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்த திட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த உலக புகழ்பெற்ற நிறுவனமான BOEING நிறுனவமும் பாதுகாப்பு துறை மூலமாக கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது.

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்திய தயாரிப்பு பொருட்களை போயிங் நிறுவனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

275 இந்திய நிறுவனங்கள் BOEING நிறுவனத்தின் F/A -18, F -15, P-8, APACHE , CHINOOK, C-17, T-7 உள்ளிட்ட பல்வேறு வகையான வானூர்திகளுக்கான பல்வேறு பாகங்களை சப்ளை செய்து வருவதாக அந்நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக துணை இயக்குனர் மரியா லெய்ன் தெரிவித்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் டாடா குழுமம் மற்றும் போயிங் ஆகியவை இணைந்து ஹைதராபாத் நகரில் TATA BOEING AEROSPACE LIMITED – TBAL எனும் கூட்டு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றன.

இந்த TABL வளாகத்தில் இருந்து அபாச்சி தாக்குதல் AH 64D APACHE ஹெலிகாப்டர்களின் உடல்பகுதி மற்றும் போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய சிவிலியன் விமானமான B-747 விமானத்தின் வால் பகுதி இறக்கைகள் தயாரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.