
அமெரிக்க கடற்படை போலந்து கடற்படையில் சேவையில் உள்ள ஒர்செல் எனும் நீர்மூழ்கி கப்பலை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒ.ஆர்.பி. ஒர்செல் எனப்படும் அந்த நீர்மூழ்கி கப்பலானது சோவியத் காலகட்டத்தை சேர்ந்தது, உலகின் பழமையான கீலோ ரக நீர்மூழ்கி என கூறப்படுகிறது.
கீலோ ரக நீர்மூழ்கிகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்பமாகும் போலந்து அப்போது சோவியத் ஆதரவு நாடாக இருந்ததால் ரஷ்யாவின் நோவோகிராட் பகுதியில் கட்டபட்டு போலந்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நீர்மூழ்கி கப்பலை பயிற்சி காரணங்களுக்காக வாங்க உள்ளதாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது, இது அமெரிக்கா வாங்கும் இரண்டாவது ரஷ்ய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படையும் இந்த கீலோ ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.