உக்ரைன் போர் காரணமாக பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ரத்து செய்த அமெரிக்கா !!

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள காரணத்தால் அமெரிக்கா நடத்தவிருந்த பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ரத்து செய்து அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானப்படை திட்டமிட்டபடி நடத்தவிருந்த மினிட்மேன்-2 கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையின் சோதனையை பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ரத்து செய்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஆன் ஸ்டெஃபானெக் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.