Day: April 29, 2022

எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மேம்படுத்தப்படும் கொச்சி கப்பல் கட்டுமான தளம் !!

April 29, 2022

சமீபத்தில் INS VIKRANT ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் பற்றிய ஊடக சந்திப்பில் பேசிய கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மூத்த அதிகாரி பிஜோய் பாஸ்கர் கப்பல் கட்டுமான தளம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அதாவது ஒரு புதிய கப்பல் கட்டும் DRY DOCK கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் இது Suezmax அளவிலான அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 2 லட்சம் டன்கள் வரையிலான எடையை சுமக்கும் எண்ணெய் கப்பல்கள், சுமார் 70,000 டன்கள் எடை […]

Read More

ஆகஸ்ட் மாதம் படையில் இணையும் முதல் சுதேசி விமானந்தாங்கி கப்பல் !!

April 29, 2022

CSL – COCHIN SHIPYARDS LIMITED கொச்சி கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்ட முதலாவது உள்நாட்டு போர் கப்பலானது ஆகஸ்ட் மாதம் படையில் இணைய உள்ளது. இந்த தகவல் ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் தற்போது கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் தொழில்நுட்ப இயக்குனர் பிஜோய் பாஸ்கர் சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பேசும் போது அடுத்த மாதம் INS VIKRANT விக்ராந்த் போர் கப்பலின் கடைசி மற்றும் மூன்றாவது கடல் […]

Read More

இந்திய கடற்படைக்கு பழைய ரஃபேல் விமானங்களை விற்க தீவிரம் காட்டும் ஃபிரான்ஸ் !!

April 29, 2022

புதன்கிழமை அன்று ஃபிரெஞ்சு பத்திரிக்கையான லா ட்ரீபியூன் “La Tribune” கடந்த சில மாதங்களாகவே ஃபிரான்ஸ் அரசு இந்திய கடற்படைக்கு பயன்படுத்தப்பட்ட RAFALE M (M – MARINE) கடற்படைக்கான ரஃபேல் போர் விமானங்களை விற்க முனைகிறது. இந்திய கடற்படைக்கு சுமார் 57 போர் விமானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை கைப்பற்ற ஃபிரான்ஸின் DASSAULT மற்றும் அமெரிக்காவின் BOEING ஆகிய நிறுவனங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. அந்த வகையில் ஃபிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்களிலேயே அதிநவீனமான RAFALE […]

Read More

ஐ நா அமைதிபடையில் இந்திய சுதேசி ராணுவ வாகனம் !!

April 29, 2022

தெற்கு சூடான் நாட்டிற்கான ஐ நா நடவடிக்கை UNMISS என அழைக்கபடுகிறது இந்த பிரிவின் கீழ் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இந்த அமைதிப்படையில் இந்திய தரைப்படையும் ஒரு அங்கமாகும், தெற்கு சூடான் நாட்டின் அப்யேய் நகரத்தில் நமது இந்திய தரைப்படை பணியாற்றி வருகிறது. இங்கு முதல் முறையாக இந்திய தரைப்படை சமீபத்தில் படையில் இணைத்த சுதேசி கவச வாகனமான KALYANI RAFAEL M4 களமிறக்கப்பட்டுள்ளது கூடவே TATA XENON வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

Read More

தேஜாஸ் மார்க்-1ஏ வின் உடல் கட்டமைப்பு சோதனைகள் ஆரம்பம் !!

April 29, 2022

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது ARDC – வானூர்தி ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள Ground Testing Centreல் தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்தின் சோதனைகளை துவங்கி உள்ளது. அதாவது MAFT – MAIN AIRFRAME FATIGUE TEST எனப்படும் உடல் கட்டமைப்பு சார்ந்த சோதனைகள் துவங்கியுள்ளதாக இவை 8 முதல் 9 ஆண்டுகள் வரை நடைபெறும் எனவும் ராணுவ தர சான்றிதழ் பெறுவதற்கு ஒரு போர் விமானத்தின் உடல் அதன் ஆயுளை விடவும் நான்கு […]

Read More

காஷ்மீரில் இஃப்தார் விருந்து வைத்த ராணுவம் !!

April 29, 2022

சமீபத்தில் இந்திய தரைப்படை காஷ்மீரின் குப்வாரா மாவடத்தில் தோடா பகுதியில் உள்ள இரு எல்லையோர கிராமங்களின் மக்களுக்கு இஃப்தார் விருந்து வைத்தது. இதை தொடர்ந்து பல மர்ம நபர்கள் இதனை தொடர்ந்து சமுக வலைதளங்களில் கேலி செய்து வந்தனர். இது பற்றி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது காலம் காலமாக எல்லையோர கிராமங்களில் நடைபெற்று வரும் நிகழ்வு என விளக்கமளித்து உள்ளது. இந்திய ராணுவம் பன்முகத்தன்மைக்கு பெயர் போன அமைப்பாகும் தற்போது அந்த உயரிய அமைப்பே மதரீதியான […]

Read More

ஃபிரான்ஸ் டென்மார்க் ஜெர்மனி செல்லும் இந்திய பிரதமர் மோடி !!

April 29, 2022

வருகிற மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இந்திய பிரதமர் மோடி ஃபிரான்ஸ் ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணமாக செல்ல உள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சான்ஸலர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி Intra Governmental Consultationஐ துவங்கி வைக்க உள்ளனர். பின்னர் அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேதன் சென்று அங்கு பிரதமர் மெட்டெ ஃப்ரெட்ரிக்ஸன் அவர்களை சந்தித்து விட்டு 2ஆவது இந்திய-நார்டிக் சந்திப்பில் கலந்து கொள்ள […]

Read More

அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் வெளியுறவு அமைச்சர் !!

April 29, 2022

இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். 1) திறன்கள் – அதாவது இந்தியா தனது திறன்களை ஒவ்வொரு துறையிலும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் அதிகரித்து கொள்ள வேண்டும். 2) எந்த விளைவையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள பழகி கொள்ள அல்லது தன்னை தானே தயார்படுத்தி கொள்ள வேண்டும். 3) சர்வதேச நிலவரத்தை எப்படியெல்லாம் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது என்பதை பற்றிய […]

Read More

சீனாவை அனுமதிக்க முடியாது; இந்தியாவுக்கே முதலிடம் மாலத்தீவு முன்னாள் அதிபர் !!

April 29, 2022

முன்னாள் மாலத்தீவு அதிபர் மொஹம்மது நஷீத் அவரது நாடு எப்போதும் இந்தியாவுக்கு தான் முதன்மை இடத்தை அளிக்கும் எனவும் சீனா மாலத்தீவு நாட்டில் அனுமதிக்காது எனவும் அதன் மூலம் சீனாவின் நில அபகரிப்பு மற்றும் கடன் வலை ஆகியவற்றில் இருந்து சிக்காமல் நழுவி விடலாம் எனவும் கூறியுள்ளார். மாலத்தீவு இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை விரும்புகிறது அதனை உறுதியாக கூற முடியும் எனவும் இத்தகைய உறவு மூலம் இரு நாடுகளும் பலனடையும் எனவும் தெரிவித்தார்.

Read More

இந்தியா இன்றி எந்த பிரச்சினையையும் தீர்க்க இயலாது – ஜெர்மனி

April 29, 2022

ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் முனைவர் தொபியாஸ் லிட்னர் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் எந்த பிரச்சினையும் தீராது என கூறியுள்ளார். மேலும் அவர் இந்தியா ஜெர்மனியின் மிக முக்கியமான நட்பு நாடு எனவும் தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இந்திய பிரதமர் மோடி ஜெர்மனி செல்ல உள்ளார் என்பதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More