இந்திய விமானப்படையின் ஏவாக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தின் 6 A319 அல்லது A321 ரக விமானங்களை கையகபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தற்போது இந்த திட்டத்தின் முதல்கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு AIRBUS A321 ரக விமானங்கள் இந்திய விமானப்படை மற்றும் DRDO வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு விமானங்களையும் ஏவாக்ஸ் AEWCS ரக விமானங்களாக மாற்றியமைத்து அவற்றில் உள்நாட்டு தயாரிப்பான நேத்ரா கண்காணிப்பு ரேடாரை இணைக்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.