பிரிட்டிஷ் அணுசார் கேந்திரங்களுக்கு மேல் பறந்த 18 சீன ட்ரோன்கள் !!

  • Tamil Defense
  • April 28, 2022
  • Comments Off on பிரிட்டிஷ் அணுசார் கேந்திரங்களுக்கு மேல் பறந்த 18 சீன ட்ரோன்கள் !!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் காரணமாக NATO தனது அணு ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்த தோதான இடமாக இங்கிலாந்தை கருதும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இங்கிலாந்தில் உள்ள ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டு சார்ந்த அணுசார் கேந்திரங்கள் மீது சீன உளவாளிகளால் இயக்கப்பட்ட ட்ரோன்கள் 18 முறை பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் எந்த ராணுவ நிலைகள் வேவு பாரக்கப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை.

தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல உளவு அமைப்புகளின் தலைவர்கள் சீனா இங்கிலாந்தின் முக்கியமான ரகசியங்களை திருட அதிதீவிரமாக முயற்சி செய்யும் என எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.