Day: April 18, 2022

உலகின் உயரமான சுரங்கத்தை சீன எல்லையோரம் கட்ட இந்தியா முடிவு !!

April 18, 2022

உலகின் உயரமான சுரங்கப்பாதையை ஹிமாச்சல பிரதேச மாநிலத்தை லடாக் மாநிலத்துடன் இணைக்கும் விதமாக ஷின்கு லா கணவாய் பகுதியில் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பணிகளில் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு ஈடுபட உள்ளதாகவும் இந்த சுரங்கப்பாதை சுமார் 16,580 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட உள்ளதாகவும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுதிரி தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ப்ராஜெக்ட் யோஜக் எனும் திட்டத்தின் கீழ் இந்த […]

Read More

இந்திய கப்பல் கட்டுமான தளங்களை பராமரிப்பு பணிகளுக்கு அமெரிக்க கடற்படை பயன்படுத்தி கொள்ளும் திட்டம் !!

April 18, 2022

இந்திய கப்பல் கட்டுமான தளங்களை அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ளும் திட்டத்தை பற்றி இரண்டு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் மேம்படுவதோடு மட்டுமின்றி இந்திய கப்பல் கட்டுமான நிறுவனங்களின் வர்த்தகமும் வருவாயும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 2+2 இருதரப்பு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை பேச்சுவார்த்தைகளில் இந்த திட்டம் பற்றிய விவாதம் முக்கிய இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More

1000 முறை சீன ரஷ்ய விமானங்களுக்கு எதிராக போர் விமானங்களை அனுப்பிய ஜப்பான் !!

April 18, 2022

கடந்த ஆண்டு மட்டுமே ஜப்பான் தனது வான்பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள சுமார் 1000 முறை போர்விமானங்களை அனுப்பியுள்ளது. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி கூறுகையில் அதிகரித்து கொண்டே வரும் அத்துமீறல்கள் தான் இதற்கு மூல காரணம் என்றும் அதற்கு முந்தைய வருடம் 725 முறை போர் விமானங்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீன விமானங்களுக்கு எதிராக ஜப்பான் 722 முறையும் அதற்கு முந்தைய வருடம் 458 […]

Read More

எல்லையோரம் ட்ரோன் ஆபரேஷன்களை விரிவுபடுத்தும் சீனா !!

April 18, 2022

இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் சீனா தனது ட்ரோன் ஆபரேஷன்களை விரிவுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ISTAR – Intelligence, Surveillance, Target Acquisition & Reconnaissance எனப்படும் உளவு, கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் காண்பது, களத்தை ஆய்வு செய்தல் போன்ற திறன்கள் வலுவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சீன மக்கள் விடுதலை ராணுவம் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருவதை அதிகரித்து கொண்டே வருவதாக பாதுகாப்பு […]

Read More

இந்தியாவுக்கான போர் கப்பல்களை ரஷ்யா சரியான நேரத்தில் டெலிவரி செய்யும் : அதிகாரிகள் !!

April 18, 2022

ரஷ்யாவில் இந்தியாவுக்கான இரண்டு தல்வார் ரக ஃப்ரிகேட் போர் கப்பல்கள் கட்டுபட்டு வருகின்றன. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் அதையொட்டி விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக இவற்றின் டெலவரி தாமதம் ஆகுமா எனும் கேள்வி எழுந்தது. இதையொட்டி ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் அதாவது திட்டமிட்டப்படியே இரண்டு போர்கப்பல்களும் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என கூறியுள்ளனர். இந்திய கடற்படைக்காக வெளிநாட்டில் கட்டமைக்கப்படும் கடைசி கப்பல்கள் இவையாக தான் இருக்கும் என இந்திய […]

Read More

இந்த வருட இறுதியில் இந்தியா வரும் இரண்டாவது S-400 TRIUMF வான் பாதுகாப்பு அமைப்பு !!

April 18, 2022

இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது S-400 TRIUMF வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது இந்திய S400 ரெஜிமென்ட் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் முதலாவது S400 படையணி டெலிவரி செய்யப்பட்டு இந்திய விமானப்படையால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். சமீபத்தில் கூட S400 TRIMUF வான் பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் பாகங்கள் […]

Read More

க்வான்டம் தொலைதொடர்பில் உலக சாதனை படைத்த சீனா !!

April 18, 2022

சீனா மிகவும் அதிநவீன தொலை தொடர்பு தொழில்நுட்பமான QUANTUM தொலை தொடர்பில் உலக சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது QSDC – QUANTUM SECURE DIRECT COMMUNICATION (பாதுகாக்கப்பட்ட நேரடி க்வான்டம் தகவல்தொடர்பு) அமைப்பின் மூலமாக சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு தகவல்கள் பரிமாறியதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த க்வான்டம் தொழில்நுட்பங்கள் மூலமாக வேகமாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும், இவற்றை இடைமறிக்கவோ அல்லது முடக்கவோ முடியாது ஆகவே ராணுவ தொலைதொடர்புக்கு பெரிய அளவில் உதவியாக […]

Read More

பிடித்த சாக்லேட்டை வாங்க எல்லையை கடந்து இந்தியா வந்த வங்கதேச பதின்பருவ சிறுவன் !!

April 18, 2022

எமான் ஹோசைன் எனும் வங்கதேச நாட்டின் கொமில்லா மாவட்டத்தை சேர்ந்த பதின்பருவ சிறுவன் தனக்கு பிடித்தமான சாக்லேட்டை வாங்க எல்லை தாண்டி வந்துள்ளான். ஒரு சிறிய ஆற்றை நீந்தி கடந்து எல்லையோர வேலியில் உள்ள ஒட்டை மூலமாக இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் நுழைந்து சாக்லேட் வாங்க வந்த போது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 13 நாள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர், அவனிடம் விசாரித்த […]

Read More