Day: April 16, 2022

ஆப்கனுக்குள் விமானத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்- தாலிபன்கள் கடும் கண்டனம்

April 16, 2022

ஆப்கனின் குனார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் பாக் விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.ஏப்ரல் 15 அன்று இரவு பாக் விமானப்படை விமானங்கள் தெற்கு கோஸ்ட் மகாணங்களில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உள்ளூர் மக்கள் இதுகுறித்து பேசிய போது தாக்குதலில் இரு குடும்பத்தை சேர்ந்த 33 பேர் உயிரழந்ததாக கூறியுள்ளனர்.குனார் மற்றும் கோஸ்ட் மகாணங்களில் உள்ள TTP பயங்கரவாத குழுக்கள் […]

Read More

அதிக இலகுரக தாக்கும் வானூர்திகளை வாங்கும் விமானப்படை

April 16, 2022

அதிநவீன இலகுரக வானூர்தியின் தாக்கும் ரகத்தின் செயல்பாடுகளில் திருப்தி கொண்ட விமானப்படை தற்போது மேலதிக வானூர்திகளை வாங்க முடிவு செய்துள்ளது.இந்த புதிய வானூர்திகளை உயர் இமாயலப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளது. ALH Mark-IV எனவும் ருத்ரா எனவும் அழைக்கப்படும் இந்த வானூர்தியை சீனா உடனான மோதல் சமயங்களில் லடாக் பகுதியில் அதிக முறை உபயோகித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்று ஸ்குவாட்ரான் வகை படையில் இணைக்க விமானப்படை திட்டமிட்டு வருகிறது.மேலும் இந்திய இராணுவமும் இந்த ரக […]

Read More

அதிஉயர் பகுதியில் சோதனை செய்யப்பட்ட ஹெலினா ஏவுகணை

April 16, 2022

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள Anti-Tank Guided Missile அதாவது டேங்க் எதிர்ப்பு ஏவுகணை தான் ‘HELINA’ ஆகும். பயன்பாட்டாளர் சோதனையாக தற்போது தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில் தற்போது கடந்த ஏப்ரல் 12,2022 அன்று ALH வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்திய விமானப் படை, இராணுவம் மற்றும் DRDO ஆகியவை இணைந்து இந்த ஏவுகணையை அதிஉயர் பகுதியில் சோதனை செய்துள்ளன.இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு […]

Read More

ஆப்கன் எல்லையில் பாக் வீரர்கள் மீது தாக்குதல்

April 16, 2022

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ரோந்து சென்ற பாக் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாக பாக் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று இதே பகுதியில் நடைபெற்ற சண்டையில் ஒரு பாக் வீரர் உயிரிழந்துள்ளார்.அதே போல செவ்வாய் அன்று நடைபெற்ற மோதலிலும் இரு பாக் வீரர்கள் […]

Read More