
இந்தியாவை சேர்ந்த ஆல்ஃபா டிசைன் ALPHA DESIGN மற்றும் இஸ்ரேலை சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் ELBIT SYSTEMS ஆகியவை
கூட்டு தயாரிப்பு முறையில் அதாவது எல்பிட் வடிவமைப்பில் ஆல்ஃபா தயாரிக்க பெங்களூர் தொழிற்சாலையில் ஸ்கைஸ்ட்ரைக்கர் SKYSTRIKER மிதவை குண்டுகளை தயாரித்து வந்தன.
தற்போது இத்தகைய 100 ட்ரோன்களை இந்த நிறுவனங்கள் இந்திய ராணுவத்திடம் டெலிவரி செய்துள்ளன, மின்சக்தியில் இயங்கும் இவை 5 கிலோ எடையுடன் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.