Day: April 8, 2022

இஸ்ரேலில் கொடுர பயங்கரவாத தாக்குதல் போர் களமான டெல் அவிவ் நகரில் ராணுவம் குவிப்பு !!

April 8, 2022

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய கொலைவெறி துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், கடந்த மூன்று வாரங்களில் நடைபெற்ற மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெல் அவிவ் நகரத்தில் இஸ்ரேலிய காவல்துறை துணை ராணுவம் மற்றும் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இஸ்ரேலிய சிறப்பு படைகள் ஒவ்வொரு வீடு கடைகளில் புகுந்து பயங்கரவாதியை தேடி […]

Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்றபட்ட ரஷ்யா !!

April 8, 2022

ஐக்கிய நாடுகள் பொது சபை உக்ரைனில் ரஷ்ய படைகள் புரிந்த போர் குற்றங்களின் அடிப்படையில் ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இதற்காக நடைபெற்ற ஒட்டெடுப்பில் 93 நாடுகள் ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும், 58 நாடுகள் ஒட்டளிக்காமலும் இருந்தன. இந்தியா இந்த ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் சீனா எதிர்த்து வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Read More

இடைத்தர கடல்சார் என்ஜின்களை தயாரிக்கும் இந்தியா !!

April 8, 2022

இடைத்தர வேகத்தில் இயங்கும் கடல்சார் என்ஜின்களை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்க இந்திய அரசு டென்டர் விட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ஆயுதப்படைகளுக்கான தேவைகளை சந்திக்கவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா எண்ணுகிறது. மேக்-1 பிரிவில் வரும் இந்த திட்டத்திற்கு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பு கொண்ட விதிகளின்படி அரசு படிப்படியாக சுமார் 90% சதவிகிதம் நிதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடுத்தர வேக என்ஜின்கள் 300-900 RPM வேகம் கொண்டவை ஆகும். உதவி […]

Read More

3 அதிநவீன கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பும் ஆஸ்திரேலியா !!

April 8, 2022

ஆஸ்திரேலிய அரசு உக்ரைனுக்கு சுமார் 20 “புஷ்மாஸ்டர்” BUSHMASTER கவச வாகனங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அவற்றின் டெலிவரி பணிகளை ஆஸ்திரேலியா துவங்கி உள்ளது முதல்கட்டமாக மூன்று வாகனங்கள் சி-17 விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆம்பர்லி பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய விமானப்படையின் தளத்தில் இருந்து இவை போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

உள்நாட்டு என்ஜினை பெறும் தொலைதூர நில தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை !!

April 8, 2022

இந்தியா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த நிர்பய் ஏவுகணை ஒரு தொலைதூர நில தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையாகும். இந்த ஏவுகணையில் தற்போது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மாணிக் சிறிய ரக டர்போ ஃபேன் என்ஜின் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சோதனைகளுக்காக 8 என்ஜின்கள் இந்த ஆண்டு தயாரிக்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு இந்த ஏவுகணைகளின் சோதனைகள் நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1500கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட இந்த […]

Read More

இறுதிக்கட்டத்தை நெருங்கும் ITCM TD திட்டம் !!

April 8, 2022

நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ITCM TD – INDIGENOUS TECHNOLOGY CRUISE MISSILE TECHNOLOGY DEMONSTRATOR திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ITCM TD என்றால் உள்நாட்டு தொழில்நுட்ப க்ரூஸ் ஏவுகணை தொழில்நுட்ப டெமொ ஏவுகணை திட்டம் என்பது பொருளாகும். இந்த திட்டம் மூலமாக சப்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் குறிப்பாக உள்நாட்டு என்ஜின் இவற்றில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே உள்நாட்டு […]

Read More

உக்ரைனுக்கு 8500 டன்கள் அளவிலான உதவி பொருட்களை வழங்கிய ரஷ்யா !!

April 8, 2022

உக்ரைனுக்கு மார்ச்-2 மூதலாக இதுவரை ஏழு நடவடிக்கைகள் மூலமாக சுமார் 8541 டன்கள் அளவிலான உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைனுடைய கெர்சோன், லூஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் இந்த உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்க ரஷ்ய அரசு சுமார் 22000 டன்களுக்கும் அதிகமான உதவி பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தவிர போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக […]

Read More

உக்ரைனில் சிக்கி கொண்ட நேட்டோ ராணுவ அதிகாரிகள் ??

April 8, 2022

உக்ரைனுடைய மரியூபோல் நகரில் ஃபிரான்ஸ் ஜெர்மனி இங்கிலாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த அதிகாரிகள் உக்ரைன் படைகளுக்கு ஆலோசனை வழங்க சென்றிருக்கலாம் எனவும் அப்போது போரின் தீவிரத்தால் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்த அதிகாரிகள் தாங்கள் வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெர்மன் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

தைவானுக்கு 95 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை !!

April 8, 2022

அமெரிக்க அரசு தைவான் நாட்டிற்கு சுமார் 95 மில்லியன் அதாவது 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தளவாடங்கள் மற்றும் கருவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தைவான் நாட்டின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான பயிற்சி, களமிறக்குதல், திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கிய மிகப்பெரிய உதவி திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை இதற்கான நடவடிக்கைகளை முற்றிலுமாக மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More