அமெரிக்க விமானப்படையின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. LGM-35A SENTINEL என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து அதாவது ரகசிய பகுதியில் இருந்து இலக்கை நோக்கி ஏவப்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் அமைப்பின் ஒரு அங்கமாக திகழும், மேலும் இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை மிகவும் நவீனமானதாகும். வையோமிங் மாகாணத்தில் உள்ள […]
Read Moreபாகிஸ்தான் கடற்படையின் ஹங்கோர் ரக நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவின் டைப்-039பி ரக நீர்மூழ்கி கப்பல்களை அடிப்படையாக கொண்டு இருநாடுகளாலும் கூட்டாக கட்டப்பட்டு வருகிறது. இந்த வகை டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கான என்ஜினுக்காக பாகிஸ்தான் ஜெர்மனியின் உதவியை நாடி MTU12V396 ரக டீசல் என்ஜின்களை சப்ளை செய்யுமாறு கேட்டு கொண்டது. ஆனால் 1989 தியானன்மென் சதுக்க படுகொலைகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதம் மற்றும் ராணுவ தளவாடங்களை சப்ளை செய்ய விதித்த […]
Read Moreஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவது இந்தியாவின் நலன்களுக்கு உகந்ததல்ல என கருதுவதாக கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் விஷயங்களை புரிய வைக்க முயற்சிப்பதாகவும் அவர் பாதுகாப்புக்கான செனட் கமிட்டி முன்பு கூறியுள்ளார். இந்தியாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வில்சன் எங்களின் நெருங்கிய கூட்டாளியும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுமான இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read Moreசமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை ஒன்று பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானில் நுழைந்தது. இந்த நிகழ்வை தொடர்ந்து இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ள ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதற்காக ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஷம்பு குமாரன் அவர்களை ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்ஸா அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். தற்போது அங்கிருந்து […]
Read Moreஉக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காணொளி வாயிலாக பேசினார். அப்போது அவர் பூகா பகுதியில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய கொலைகளை சுட்டி காட்டி உங்கள் முன் இரண்டு வழிகள் தான் உள்ளன, முதலாவது ரஷ்யாவை தண்டிப்பது இரண்டாவது இந்த சபையை நீங்களே கலைத்து விடுவது என்பன தான் அவை என காட்டமாக பேசியுள்ளார். மேலும் இந்த போரை துவங்கிய ரஷ்யா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்து கொண்டு […]
Read Moreமத்திய ரிசர்வ் காவல்படை சுமார் 10,000 TAR என அழைக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த வருடம் ஃபெப்ரவரி மாதம் மத்திய ரிசர்வ் காவல்படை இந்த வகை துப்பாக்கிகளுடன் சேர்த்து கட்டக் அசால்ட் ரைபிள்களையும் படையில் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை துணை ராணுவ படைகளான BSF, CISF, ITBP மற்றும் SSB ஆகியவற்றிற்கு சுமார் 10,000 TAR துப்பாக்கிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளன, இந்த […]
Read Moreஅமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தவிரத்து புதிய அதிநவீன மின்னனு போர் முறை தொழில்நுட்பங்களையும் உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு அதிவேக அணுசார் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டி கொடுக்க மூன்று நாடுகளும் உருவாக்கிய ஆக்கஸ் அமைப்பின் திட்டங்களில் இவையும் அடங்கும் என கூறப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தால் […]
Read Moreகடந்த மூன்று மாத காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சுமார் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 பாகிஸ்தானிய/வெளிநாட்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக அமைந்துள்ளது. சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட CRPF வீரருக்கு இறுதி மரியாதை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போது காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
Read Moreகடந்த 2016-2017 காலகட்டத்தில் இருந்து தற்போதைய 2021-2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. 2016-2017 காலகட்டத்தில் 1500 கோடியாக இருந்த இந்தியாவின் ஆயுத ஏற்றமதி தற்போது சுமார் 12000 கோடி எனும் மதிப்பை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக இந்தியா பிரம்மாஸ் ஏவுகணைகள், கடற்படை கலன்கள், ஹெலிகாப்டர்கள், இரவில் பார்க்கும் கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆகியை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளன. அதாவது இந்த ஒப்பந்தம் மூலமாக சிவிலியன் போக்குவரத்து விமானங்களை டேங்கர் போக்குவரத்து ரக விமானங்களாக மாற்றியமைப்பது தான் அதன் சாராம்சம் ஆகும். இதனால் இந்திய விமானப்படை சற்றே பழைய சிவிலியன் போக்குவரத்து விமானங்களை வாங்கி அல்லது கையகபடுத்தி டேங்கர் விமானங்களாக மாற்றி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 6 ஐஎல்78 […]
Read More