Day: April 1, 2022

ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை பல பகுதிகளில் விலக்க மத்திய அரசு முடிவு !!

April 1, 2022

மத்திய அரசு அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து AFSPA சட்டத்தை விலக்க முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாக பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை இந்த மாநிலங்களில் தலை விரித்தாடிய நிலையில் அவற்றை ஒடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தை பல தரப்பினரும் முற்றிலுமாக எதிர்த்து போராடினர், மேலும் சிலர் அமைதி நிலைநாட்டப்பட்ட இடங்களில் இருந்து இந்த சட்டத்தை விலக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ராணுவ அதிகாரிகளும் தேவையற்ற பகுதிகளில் இருந்து […]

Read More

பெல் நிறுவனத்துடன் 3000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொண்ட பாதுகாப்பு அமைச்சகம் !!

April 1, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 3102 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை பாரத் எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது. அதாவது பெல் நிறுவனத்தின் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் பிரிவுகளுடன் தனித்தனியாக இரண்டு பொருள்களுக்கான இரண்டு வெவ்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பெங்களூர் பிரிவுடன் இந்திய விமானப்படையின் போர் விமானங்களுக்கான மின்னனு போரியல் அமைப்புகளுக்கான 1993 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தமும் ஹைதராபாத் பெல் பிரிவுடன் இந்திய விமானப்படைக்கான IEWR – Instrumented Electronic Warfare […]

Read More

தொடர்ச்சியாக இந்தியாவுக்கு அழைப்பு விடும் சர்வதேச நாடுகள் அதிகரித்துள்ள இந்தியாவின் முக்கியத்துவம் !!

April 1, 2022

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போருக்கு பிறகு சர்வதேச நாடுகள் பல இந்தியாவை அதிகமாக நாடி வருகின்றன. 19 மார்ச் ஜப்பான் பிரதமர் இந்தியா வந்தார், 20 மார்ச் ஆஸ்திரிய நாட்டின வெளியுறவு அமைச்சர், 21 மார்ச் அன்று ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய பிரதமருடன் வீடியோ கான்ஃபரஸிங் மூலமாக சந்தித்தது. 23 மார்ச் அன்று க்ரீஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் முதல்முறையாக இந்தியா வந்தார், 24 மார்ச் ஒமன நாட்டு வெளியுறவு அமைச்சர் இந்தியா […]

Read More

அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்ப உள்ள பாகிஸ்தான் !!

April 1, 2022

அமெரிக்கா பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டுள்ளது. இதற்காக மூத்த அமெரிக்க தூதரை சம்மன் அனுப்பி நேரில் அழைத்து தனது கண்டனத்தை பாகிஸ்தான் அரசு பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பாகிஸ்தான் ராணுவமும் தங்களது நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மூலமாக எண்ணெய் வாங்க இந்தோனேசியா திட்டம் ??

April 1, 2022

இந்தோனேசிய அரசு இந்திய உதவியுடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிளை பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றன. இதனையடுத்து மலிவு விலையில் கிடைக்கும் இந்த கச்சா எண்ணெய்யை இந்தியாவின் ரூபாய் கொண்டு வாங்க இந்தோனேசியா விரும்புகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தோனேசியா ரஷ்யாவுடன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய தேஜாஸுக்கு போட்டியாக துருக்கி களமிறக்கும் இலகுரக போர்விமானம் !!

April 1, 2022

மலேசியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் துருக்கி தனது இலகுரக போர் விமானமான HURJETஐ காட்சிபடுத்தியுள்ளது. மலேசிய விமானப்படைக்கு ஏற்கனவே இலகுரக போர் விமானங்கள் வாங்க நடைபெற்று வரும் தேர்வில் இந்திய தேஜாஸ் முன்னிலை வகித்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயமாகும் இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை கைபற்றும் எண்ணத்தோடு துருக்கியும் தனது விமானத்தை மலேசிய தலைநகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மலேசியா துருக்கி தயாரித்த பல்வேறு வகையான ராணுவ […]

Read More

செர்னோபில் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ரஷ்ய படையினர் !!

April 1, 2022

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை மையத்தில் பணியில் இருந்த ரஷ்ய படையினர் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீரர்கள் பெலாரஸ் நாட்டில் உள்ள ஒரு சிறப்பு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ரஷ்ய படைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

மரியூபோல் நகரில் மனிதாபிமான பாதையை திறப்பதாக ரஷ்யா அறிவிப்பு !!

April 1, 2022

மரியூபோல் நகரில் உக்ரைன் படைகளுடனான சண்டையை தற்காலிகமாக நேற்று நிறுத்தி மனிதாபிமான பாதையை திறப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது மரியூபோல் நகரில் இருந்து ஸாப்ரோஸியா நகரம் வரை ரஷ்யா கட்டுபாட்டில் உள்ள பெர்டியான்ஸ்க் துறைமுகம் வழியாக இந்த பாதை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு உக்ரைன் முழு ஒத்துழைப்பு மற்றும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் வழியாக கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

இந்தியா வந்து சேர்ந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் !!

April 1, 2022

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இந்தியா சுற்றுபயணமாக தலைநகர் தில்லி வந்து சேர்ந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் ராணுவ அதிகாரிகள், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் மற்றும் இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி ஆகியோர் வரவேற்றனர். நாளை அவர் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா கூறியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் […]

Read More

கேம்ப்பெல் பே-யில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் சி-17 விமானம்

April 1, 2022

இந்திய விமானப்படையின் பெரும் போக்குவரத்து விமானம் #ஹெர்குலிஸ் #C130, இந்தியாவின் தென்கோடி கடற்படை தளமான INS BAAZ #கேம்ப்பெல்_பே (Campbell Bay, Andaman & Nicobar Command) யில் முதல்முறையாக நேற்று தரையிறங்கி இருக்கிறது… இந்தியாவின் தென்கோடி என்று #கன்னியாகுமரி சொல்லப்பட்டாலும், உண்மையில் க்ரேட் நிகோபார் தீவில் இருக்கும் #இந்திரா_பாய்ண்ட் என்ற இடம் தான் இந்தியாவின் தென்கோடி… தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா எல்லாம் 500 – 600 கிலோமீட்டருக்குள் தான் இருக்கும். மலாக்கா ஸ்ட்ரைட் வழியாக வரும் […]

Read More