148 போர் விமானங்கள் பங்கேற்கும் இந்திய விமானப்படையின் போர் பயிற்சி !!

  • Tamil Defense
  • March 3, 2022
  • Comments Off on 148 போர் விமானங்கள் பங்கேற்கும் இந்திய விமானப்படையின் போர் பயிற்சி !!

இந்திய விமானப்படையானது வாயு ஷக்தி என்ற பெயரில் மார்ச் 7 முதல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மிகப்பெரிய போர் பயிற்சி நடத்த உள்ளது .

இதில் இந்திய விமானப்படையின் 148 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன குறிப்பாக ரஃபேல் முதல் முறையாக பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பயிற்சியில் இந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஜாகுவார், தேஜாஸ், மிக்-29, சுகோய்-30, ரஃபேல் உள்ளிட்ட 109 சண்டை விமானங்களும் சி-17 மற்றும் சி-130 ஆகிய போக்குவரத்து விமானங்களும் கலந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.