இஸ்ரேலில் சந்திக்கும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதிய அத்தியாயம் !!

  • Tamil Defense
  • March 28, 2022
  • Comments Off on இஸ்ரேலில் சந்திக்கும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதிய அத்தியாயம் !!

இஸ்ரேல் நாட்டில் உள்ள நெகேவ் பாலைவன பகுதியில் இஸ்ரேல் அமெரிக்கா எகிப்து மொராக்கோ பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்.

இந்த நிகழ்வு அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது இது முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்து வைத்த அமைதி ஒப்பந்தத்திற்கான பலன் என்றால் மிகையாகாது.

இந்த சந்திப்பில் உக்ரைன் போர் , ஈரான் உடனான அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் போன்ற முக்கிய விஷயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.