உக்ரைனுக்கான போலந்தின் போர் விமானங்களை நிராகரித்த அமெரிக்கா காரணம் என்ன ??

  • Tamil Defense
  • March 11, 2022
  • Comments Off on உக்ரைனுக்கான போலந்தின் போர் விமானங்களை நிராகரித்த அமெரிக்கா காரணம் என்ன ??

சமீபத்தில் போலந்து நாடு தன்னிடம் உள்ள 28 மிக்-29 ரக போர் விமானங்களை அமெரிக்கா மூலமாக உக்ரைனிய விமானப்படைக்கு வழங்க முன்வந்தது .

ஜெர்மனியில் உள்ள அமெரிக்க/நேட்டோ விமானப்படை தளமான ராம்ஸ்டெய்ன் தளத்திற்கு இந்த விமானங்களை அனுப்பி அங்கிருந்து உக்ரைனிய விமானப்படையிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்கா தற்போது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதாவது ராம்ஸ்டெய்ன் தளத்தில் இருந்து உக்ரைனிய விமானப்படைக்கு போர் விமானங்களை ஒப்படைக்கும் திட்டம் சாத்தியமில்லை என கூற உள்ளது.

இதற்கு காரணமாக ரஷ்ய அதிபர் புடினுடைய மிரட்டல் சுட்டு காட்டப்படுகிறது உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அளித்து ஆதரவு வழங்கும் நாடுகளும் போரில் கலந்து கொண்டதாக கருதப்படும் எனும் ரஷ்ய அதிபர் புடினுடைய மிரட்டல் தான் அது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை ரஷ்யா உடனான நேரடி மோதலை தவிரக்க பார்க்கின்றன ஆகவே தான் போலந்து நாட்டின் திட்டதிற்கு அமெரிக்காவோ நேட்டோவோ ஒப்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.