ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் அமெரிக்க செய்தியாளர் !!

  • Tamil Defense
  • March 15, 2022
  • Comments Off on ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் அமெரிக்க செய்தியாளர் !!

ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் இந்தியா சுமார் 3 மில்லியன் பேரல்கள் அளவிலான கச்சா எண்ணெயை மலிவு விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த நிலையில் இதனை கண்டித்து பல்வேறு அமெரிக்க ஐரோப்பிய புவிசார் அரசியல் நிபுணர்கள் இந்தியா மீது தங்களது வன்மத்தை கக்கி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க ஊடகவியலாளர் ட்ரிஷ் ரேகன் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் அது இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விடும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் பல்வேறு ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகள் தற்போதும் ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதும்

அவற்றிற்கான கட்டணமாக பல பில்லியன் டாலர்களை நாள்தோறும் கொட்டி கொடுப்பதும் இவர்களின் கண்களுக்கு புலப்படாதது முரணாக உள்ளது என்றால் மிகையல்ல.