தொடர்ந்து இந்தியா உடனான ஆயுத வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on தொடர்ந்து இந்தியா உடனான ஆயுத வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் அமெரிக்கா !!

இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மேற்குலக நாடுகள் இந்தியாவை மிக கடுமையாக விமர்சித்து வரும் நேரத்தில் அவ்வப்போது பொருளாதார தடைகள் பற்றியும் பேச்சு எழுகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சினைகள் இந்திய அமெரிக்க உறவுகளை பாதிக்காது எனவும் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியா உடனான அமெரிக்க ஆயுத வர்த்தகம் தற்போது சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் அளவை தொட்டுள்ளதாகவும் கூறிய அவர்,

ரஷ்யா உடனான ஆயுத வர்த்தகத்தை 53 சதவீகிதமாக இந்தியா குறைத்து கொண்ட அதே நேரத்தில் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதும் உள்நாட்டு தயாரிப்பும் அதிகமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.