வடகொரியாவை ரஷ்யா மற்றும் சீனா கண்டிக்க வேண்டும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 27, 2022
  • Comments Off on வடகொரியாவை ரஷ்யா மற்றும் சீனா கண்டிக்க வேண்டும் அமெரிக்கா !!

வடகொரியாவை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கண்டிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வடகொரியா நடத்திய அணு ஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை ஒட்டி அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த சோதனைக்கு பிறகு அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அமைப்பு வடகொரியா மீது தடைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.