ஃபில் காம்பியன் 1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பின்னர் சிறப்பு படைகளுக்கான சோதனையில் தேர்வு பெற்று SAS படையில் இணைந்தார்.
இவர் நீண்ட நெடிய சண்டை மற்றும் போர் அனுபவம் மிக்கவர் ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள கருத்து பலரின் கவனத்தை பரவலாக ஈர்த்துள்ளது.
அதாவது எவ்வித பயிற்சியும் சண்டை அல்லது போர் அனுபவமோ இல்லாத ராணுவத்தில் பனியாற்றாத எவரும் உக்ரைன் போரில் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ஒரு ராணுவ வீரரை பயிற்சி கொடுத்து உருவாக்க குறைந்தபட்சம் 7 மாதங்கள் தேவைப்படும் அதன் பிறகு தான் களமிறக்கப்படுவார் அப்படி ஏதும் இல்லாமல் நேரடியாக போர் முனைக்கு செல்வது பைத்தியகாரத்தனம் எனவும்
எந்த வித ராணுவ அனுபவமோ அல்லது ராணுவ திறன்களோ இல்லாமல் போர் முனைக்கு செல்பவர்கள் அந்த படையணிக்கு பாரமாக தான் இருப்பார்களே தவிர அவர்களால் எவ்வித நன்மையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவர்கள் நினைப்பது போன்று சண்டையில் களமிறக்கப்படும் வாய்ப்புகள் குறைவு அதிகப்படியாக காவல் பணிகளில் தான் ஈடுபடுத்தபடுவார்கள் எனினும் போர் களம் அதிக ஆபத்தானதாகும்,
ஒரு முன்னாள் சிறப்பு படை வீரரான நானே உக்ரைன் செல்லமாட்டேன் உகவே எந்த ஒரு ராணுவ அனுபவமும் அடிப்படை பயிற்சி கூட பெறாதவர்களும் உக்ரைன் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.