உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட செல்லும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வெளிநாட்டவர்கள் திரும்பவும் தங்களது நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தந்த நாடுகளில் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படலாம்.
எனவே அத்தகைய சூழ்நிலைகளையும் அந்த வெளிநாட்டவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு உக்ரைன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.