ரஷ்ய வீரர்கள் சித்திரவதை விசாரணை நடைபெறுவதாக உக்ரைன் அறிவிப்பு !!
1 min read

ரஷ்ய வீரர்கள் சித்திரவதை விசாரணை நடைபெறுவதாக உக்ரைன் அறிவிப்பு !!

சமீபத்தில் கைதான அல்லது சரணடைந்த ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் தரைப்படை வீரர்கள் கால் மூட்டுகளில் ஏகே47 ரக துப்பாக்கிகள் கொண்டு சுடும் காணொளி வெளியானது.

இதனையடுத்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் இந்த காணொளி பற்றிய விசாரணை துவங்கி நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும் அவர் நாங்கள் ஒரு ஐரோப்பிய நாட்டு ராணுவம் நாங்கள் போர் கைதிகளை சித்திரவதை செய்வதில்லை இது உண்மையானால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வாகும் என கூறியுள்ளார்.

இது தவிர அவர் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனிய ராணுவத்தினரை போர் கைதிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும்

உங்களது சொந்த விருப்ப வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு செயலாற்ற வேண்டும் நாம் ஐரோப்பாவை சேர்ந்த ராணுவம் என எச்ரித்துள்ளார்