1 min read
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்; அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் போர் தான் மல்லுக்கட்டும் ரஷ்யா நேட்டோ !!
ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கொவ் ரஷ்யாவின் இருப்பிற்கு பேராபத்து ஏற்ப்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என கூறி உள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறையின் இணை தலைவர் மார்கோ ரூபியோ ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி
அதன் காரணமாக கதிர்வீச்சு அல்லது கதிரியக்க துகள்கள் நேட்டோ நாடுகளில் இயற்கை காரணிகளால் பரவினால் நேட்டோ ரஷ்யா மீது போர் தொடுக்கும் என கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் இப்படி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சற்றே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது.