இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் நரவாணே அடுத்த போரை இந்திய ஆயுதங்களுடன் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாடம் சுதேசி தயாரிப்புகளை ஊக்குவித்து பயன்பாட்டை பன்மடங்கு அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் போர்கள் எப்போது எந்த நொடி வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதையே உக்ரைன் ரஷ்ய போர் காட்டுகிறது ஆகவே தயார்நிலை இன்றியமையாதது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.