
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அரசானது நேட்டோ அமைப்பு அந்நாட்டு வான் பரப்பை NO FLY ZONE ஆக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க் உக்ரைன் வான் வெளியை NO FLY ZONE ஆக அறிவிக்க முடியாது எனவும்
அதற்கு காரணம் உக்ரைன் வான் வெளியில் நேட்டோ போர் விமானங்களை அனுப்பி ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டிய நிலை நிச்சயமாக ஏற்படும் எனவும்
இப்படி செய்தால் ரஷ்யா பதிலுக்கு நேட்டோ நாடுகளை தாக்கும் ஐரோப்பா முழுவதும் இந்த போர் பரவி அணு ஆயுத போராகவும் மாறும் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தனது நாட்டின் மீது தொடர்ந்து குண்டு வீச ரஷ்யாவுக்கு நேட்டோ அமைப்பு பச்சை கொடி காட்டியுள்ளதாக விமர்சனம் செய்து உள்ளார்.