காமிகாஸே ட்ரோன்களை உக்ரைனுக்கு அனுப்பும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • March 23, 2022
  • Comments Off on காமிகாஸே ட்ரோன்களை உக்ரைனுக்கு அனுப்பும் அமெரிக்கா !!

அமெரிக்கா சமீபத்தில் 800 மில்லியன் டாலர் அளவிலான மதிப்பு கொண்ட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் அடங்கிய தொகுப்பை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளது.

அந்த தொகுப்பில் FGM-148 JAVELIN, FIM-92 STINGER, AT-4 போன்ற அதிநவீன டாங்கி எதிர்ப்பு மற்றும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் அடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுடன் SWITCHBLADE என்ற 2அடி நீளம் கொண்ட 5 பவுன்ட் எடை கொண்ட தற்கொலை தாக்குதல் நடத்தும் ஆளில்லா வானூர்தியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை வீரர்கள் எளிதில் சுமந்து சென்று ஏவி இலக்கை அடையாளம் கண்டு கண்காணித்து இலக்கின் மீது மோதி வெடித்து அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.