ரஷ்ய படைகளிடம் இருந்து இர்பின் நகரம் விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு !!
1 min read

ரஷ்ய படைகளிடம் இருந்து இர்பின் நகரம் விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு !!

உக்ரைனுடைய வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான இர்பின் ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நகரத்தின் மேயர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் உக்ரைனிய தரைப்படை மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்ட ஜார்ஜியன் லிஜியன் ஆகிய படையணிகள் பங்கு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இர்பின் நகரத்தை தவிர மோட்ஸைன், லிஸ்னே, காபிடாநிவ்கா மற்றும் டிமித்ரிவ்கா ஆகிய நகரங்களும் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து உக்ரைனிய படைகள் ஹோஸ்டோமெல் மற்றும் பூகா போன்ற நகரங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.