சுகோய் போர் விமானங்களை பராமரிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட உகாண்டா !!

  • Tamil Defense
  • March 23, 2022
  • Comments Off on சுகோய் போர் விமானங்களை பராமரிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட உகாண்டா !!

உகாண்டா அரசாங்கம் தங்கள் நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சுகோய்30 எம்கே ரக போர் விமானங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகளை இந்தியாவின் சுகோய் தயாரிப்பாளரான அரசுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உகாண்டா ரஷ்யாவிடம் இருந்து மேற்குறிப்பிட்ட சுகோய்-30 எம்கே ரக போர் விமானங்களில் ஆறு விமானங்களை பத்தாண்டுகளுக்கு முன்னர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.