உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 16,000 பேர் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் கலந்து கொள்ள சென்றுள்ள நிலையில் இரண்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
தில்லியில் உள்ள உக்ரைனிய தூதகரத்திற்கு சென்று அந்நாட்டு ராணுவ பிரதிநிதியை சந்தித்து தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர் உடனடியாக விசா ஸ்டாம்பிங் செய்ய வலியுறுத்திய போதும்
அந்த பாதுகாப்பு துறை பிரதிநிதி மறுத்துள்ளார் பின்னர் முடிவு செய்துவிட்டு அழைப்பதாக இருவரிடமும் அவர் தெரிவித்துள்ளதாக கூறினர்.
மேலும் ஒருவர் பேசும்போது ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாகவும் ரஷ்யர்களை பிடிக்கும் எனவும் ஆனால் அவர்களின் தற்போதைய நடவடிக்கையில் உடன்பாடில்லை எனவும் தெரிவித்துள்ளார்.