
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். பருந்து வானூர்தி படைத்தளம் அமைந்துள்ளது.
இந்த படைத்தளத்தில நேற்று காலை நடைபெற்ற விழாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு த்ரூவ் மார்க்-3 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் இணைந்தன.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய கடற்படை பதினெழு த்ரூவ் மார்க்-3 ரக ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க ஆர்டர் செய்துள்ளது என்பதும் 2 புதிய ஹெலிகாப்டர்களால் தமிழக கடலோர பகுதியில் கண்காணிப்பு வலுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.