துருக்கியில் இருந்து ட்ரோன்களுடன் திரும்பிய உக்ரைனிய விமானம் !!

  • Tamil Defense
  • March 28, 2022
  • Comments Off on துருக்கியில் இருந்து ட்ரோன்களுடன் திரும்பிய உக்ரைனிய விமானம் !!

உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான ஆண்டனோவ் ஸ்டேட் என்டர்ப்ரைஸ் தற்போது போருக்கான உதவிகளை அளித்து வருகிறது.

அந்த வகையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான AN-124 ரக சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று துருக்கியில் இருந்து பைராத்கர் ட்ரோன்களுடன் ஐரோப்பா திரும்பி உள்ளது.

அதாவது நேரடியாக உக்ரைனில் தரையிறங்க முடியாத காரணத்தால் போலந்து நாட்டில் உள்ள ஷெஷோவ் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

ஹங்கேரி நாட்டு அரசு இந்த விமானம் தனது வான் வெளிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை என்பதும் ஷெஷோவ் நகரம் வழியாக தான் உக்ரைனுக்கான மேற்குலக ஆயுத சப்ளை நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.