ரஷ்ய அதிபர் புடினிடம் முன்வைக்கப்பட்ட மூன்று அம்ச திட்டம் !!

  • Tamil Defense
  • March 12, 2022
  • Comments Off on ரஷ்ய அதிபர் புடினிடம் முன்வைக்கப்பட்ட மூன்று அம்ச திட்டம் !!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினிடம் மூன்று அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது முதலில் மத்திய கிழக்கில் இருந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக சண்டையிட விரும்புவோரை டான்பாஸ் பகுதிக்கு கொண்டு வருவது,

இரண்டாவது உக்ரைன் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ராணுவ தளவாடங்களை ரஷ்ய ஆதரவு டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் படைகளுக்கு வழங்குவது,

மூன்றாவது ரஷ்யாவின் மேற்கு எல்லையோர பகுதிகளில் அதாவது கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளுடனான பாதுகாப்பை வலுப்படுத்துவது

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் முதல் இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மூன்றாவது திட்டத்தை பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.