விரைவில் ஏவப்பட உள்ள மூன்று ராணுவ செயற்கைகோள்கள் !!

விரைவில் இந்தியாவின் முப்படைகளுக்கான மூன்று தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்திய கடற்படைக்கென சொந்தமாக GSAT-7 மற்றும் இந்திய விமானப்படைக்கு சொந்தமாக GSAT-7A செயற்கைகோள்கள் உள்ளன.ஆனால் இந்திய தரைப்படையிடம் செயற்கைகோள்கள் ஏதும் இல்லை.

இதுவரை இந்திய விமானப்படையின் GSAT-7A செயற்கைகோளை தான் இந்திய தரைப்படை தனது தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தது என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி எதிர்காலத்தில் முப்படைகளுக்கும் GSAT-7R, GSAT-7B, GSAT-7C ஆகிய மூன்று புதிய தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் ஏவப்பட உள்ளன.

இந்திய கடற்படையின் GSAT-7 செயற்கைகோளின் காலம் முடிந்ததையடுத்து புதியதாக GSAT-7B செயற்கைகோளை பெற உள்ளது.

இந்திய விமானப்படை புதியதாக GSAT-7C ரக செயற்கைகோளை பெற உள்ளது ஏற்கனவே உள்ள GSAT-7A ரக செயற்கைகோளையும் சேர்த்து பயன்படுத்தும்.

இந்திய தரைப்படை GSAT-7B ரக தகவல் தொடர்பு செயற்கைகோளை பெற உள்ளது ஆகவே இனி சொந்தமாக தகவல் தொடர்பு திறன்களை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஜ