மூன்றாவது உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத போராக இருக்கும் ரஷ்ய அமைச்சர் !!

  • Tamil Defense
  • March 3, 2022
  • Comments Off on மூன்றாவது உலகப்போர் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத போராக இருக்கும் ரஷ்ய அமைச்சர் !!

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ரஷ்யாவுக்கு பல நட்பு நாடுகள் உள்ளதாகவும் ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.

உக்ரைன் அணு ஆயுதம் பெற ஒருநாளும் ரஷ்யா அனுமதிக்காது மேலும் உக்ரைனில் உள்ள தாக்குதல் ஆயுதங்களை ரஷ்ய படைகள் அகற்றி விடும் எனவும் தெரிவித்தார்.

இந்த தடைகளை நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தோம் ஆனால் விளையாட்டு வீரர்கள் ஊடகத்தினர் கலைஞர் மீதான தடைகளை எதிர்பார்க்கவில்லை.

மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் கோரிக்கைகளை சற்றும் மதிக்கவில்லை ஐரோப்பாவுக்கான புதிய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம் நிராகரிக்கப்பட்டது.

மூன்றாவது உலக போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் உலக போரை தவிர தடைகளுக்கு வேறு மாற்று ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.