2027ல் தேஜாஸ் மார்க்2, 2035ல் ஆம்கா ஆகியவை தயாரிப்பு நிலையை எட்டும் !!
1 min read

2027ல் தேஜாஸ் மார்க்2, 2035ல் ஆம்கா ஆகியவை தயாரிப்பு நிலையை எட்டும் !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் மாதவன் அவர்கள் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் 2027 ஆம் ஆண்டில் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மார்க்-2 ரகமும்; 2035ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகியவை தயாரிப்பு நிலையை எட்டும் என கூறினார்.

இது தவிர டாடா மற்றும் ஏர்பஸ் குழுமங்கள் இணைந்து இந்திய விமானப்படைக்காக தயாரிக்க உள்ள சி295 விமான தயாரிப்பு திட்டத்தையும் வரவேற்று பாராட்டி பேசினார்.

தனியார் நிறுவனங்கள் தனியாகவோ அல்லது அரசுத்துறை நிறுவனங்ஙளுடன் இணைந்தோ பாதுகாப்பு துறையில் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவது நல்ல விஷயம் என்றது குறிப்பிடத்தக்கது.