நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது சுவீடன் பிரதமர் !!

  • Tamil Defense
  • March 9, 2022
  • Comments Off on நேட்டோவில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க முடியாது சுவீடன் பிரதமர் !!

சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சன் எதிர்கட்சிகளின் நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பம் நிச்சயமாக ஐரோப்பாவின் ஸ்திரத்தன்மையை பாதித்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1814ஆம் ஆண்டு முதல் சுவீடன் நாடு போர்களை சந்தித்தது இல்லை மேலும் அந்நாட்டின் வெளியுறவு கொள்கை நடுநிலையாகவே உள்ளது எந்தவித ராணுவ கூட்டமைப்பிலும் இணைய கூடாது என்பது அவர்களின் கொள்கையாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக அந்நாடு ரஷ்யா மீதான அச்சத்தின் காரணமாக நேட்டோ அமைப்புடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அந்நாட்டு இப்படி அறிவித்த கையோடு சுவீடனுடைய பாதுகாப்பிற்கும் கிழக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு நீண்டகால ஸ்திரமான கொள்கைகள் தேவை எனவும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தான் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உக்ரைன் படையெடுப்பிற்கு பிறகு சுவீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைய முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது கூடுதல் தகவல் ஆகும்.