இந்தியாவுக்கு பல்வேறு வகையான ராணுவ வாகனங்களை விற்கு முன்வந்த சுவீடன் !!

சுவீடன் நாட்டின் CV90 ரக ராணுவ வாகனங்கள் இந்திய தரைப்படையின் இலகுரக டாங்கி, எதிர்கால காலாட்படை சண்டை வாகனம் மற்றும் எதிர்கால சண்டை வாகனம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என தெரிவித்துள்ளது.

இந்த மூன்று வாகனங்களையும் தனித்தனியாக வாங்கினால் மூன்று முறை தொழில்நுட்ப பரிமாற்றம் சோதனைகள் மூன்று வெவ்வேறு தொழிற்சாலைகள் என பெரும் தொகையை செலவிட வேண்டியதாகும்.

ஆனால் CV90 ரக வாகனத்தின் சேஸிஸ் மட்டும் வாங்கி அதனை மூன்று வகையாக பயன்படுத்தி கொள்ளலாம் ஆகவே காலவிரயம் மற்றும் பொருட்செலவு கணிசமான அளவில் குறைகிறது.

இந்த CV90 வாகனத்தை இந்திய தரைப்படை பல்வேறு வகைகளில் எவ்வித தடங்கலும் இன்றி சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது சிறப்பாகும்.